தமிழகத்திற்கு தண்ணீர் வருமா? வராதா
தமிழ்நாட்டுக்கு போதிய தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்து வருகிறது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க வருகிற புதன்கிழமை 23-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்துக்கு பிறகு முக்கிய முடிவெடுக்கப்படும் என தெரிகிறது. மேலும், காவிரி விவகாரம் தொடர்பான வழக்கை உரிய வாதங்களுடன் எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.
Tags :