கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் விண்ணப்ப விநியோகம் இன்று சென்னையில் தொடங்கியது

by Editor / 20-07-2023 10:40:27am
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் விண்ணப்ப விநியோகம் இன்று சென்னையில் தொடங்கியது

தமிழ்நாட்டில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் தொடர்பாக விண்ணப்ப விநியோகம் இன்று சென்னையில் தொடங்கியுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட் பகுதிகளில் வீடு, வீடாக சென்று டோக்கன், விண்ணப்பம் விநியோகிக்கும் பணியை துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் தலைமையில், ரேஷன் கடை பணியாளர்கள் வழங்கி வருகின்றனர். வரும் செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக தகுதியான நபர்களை தேர்வு செய்தல், வங்கிக் கணக்கு சரிபார்த்தல், விண்ணப்ப விநியோகம், முகாம்கள் உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.


 

 

Tags : கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் விண்ணப்ப விநியோகம்

Share via

More stories