அமைச்சர் கண்ணப்பன் இலாகாவை பறித்து பொன்முடிக்கு வழங்கப்பட்டது,

தமிழ்நாடு அமைச்சரவையில், அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் இந்த அமைச்சரவை இலாகா மாற்றம் நடைபெற்றுள்ளது.அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் தமிழ்நாடு பால்வளத்துறை, காதி, கிராம வாரியத்துறை ஆகிய துறைகள் இருந்தன.இந்நிலையில், தற்போது அவரிடம் இருந்து காதி, கிராம வாரியத்துறை மாற்றம் செய்யப்பட்டு, வனத்துறை அமைச்சர் பொன்முடிக்கு அது கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Tags : அமைச்சர் கண்ணப்பன் இலாகாவை பறித்து பொன்முடிக்கு வழங்கப்பட்டது,