ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா.. தீவிரவாதிகளின் முகாம்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்..

by Admin / 28-08-2021 02:23:57pm
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா.. தீவிரவாதிகளின் முகாம்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்..

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அவர்கள் மீது அமெரிக்க ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.
 
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட 90 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு, ஐ.

 எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

அமெரிக்க ராணுவத்திற்கு மொழிபெயர்ப்பு உதவி செய்தவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இத்தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க படை இன்று ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது.  ஐ.
 
எஸ். தீவிரவாத முகாம்கள் மீது அமெரிக்கா படை தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதனை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் உறுதிப்படுத்தியுள்ளது.

இதனிடையே, காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட கூடிய வாய்ப்புகள் இருப்பதால் மக்கள் அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனை அடுத்து அங்குள்ள மக்கள் அனைவரும் உடனடியாக விமான நிலையத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனால் ஆப்கானில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

 

Tags :

Share via