கந்து வட்டி கேட்டு மிரட்டி ரூபாய் 8 கோடி மதிப்பிலான வணிக வளாகத்தை அபகரித்த நபர் கைது

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நகைக் கடை வைத்து தொழில் செய்து வரும் கோமதி நாயகம் என்பவர் பணத் தேவைக்காக செல்வவிநாயகர் புரத்தைச் சேர்ந்த தங்கதுரை என்பவருக்கு தனது நகைக் கடையை எழுதி கொடுத்து, அவரிடமிருந்து ரூபாய் 95 லட்சத்தை கடனாக பெற்றுள்ளார். இதற்காக வார வட்டியாக ரூபாய் 1,90,000 செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கோமதி நாயகம் தனது தோட்டத்தை விற்று தங்கதுரைக்கு செலுத்தவேண்டிய கடனை கொடுக்க சென்ற போது, மொத்தத் தொகையாக ரூபாய் 4 கோடி தரவேண்டும் என்றும் அதற்காக அவரின் பேரில் இருந்த ரூபாய் 8 கோடி மதிப்பிலான வணிக வளாகத்தையும் அபகரித்து மோசடி செய்துள்ளார்.இதில் மனமுடைந்த கோமதி நாயகம் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து கோமதி நாயகத்தின் மனைவி கிருஷ்ண சாந்தி கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் திரு. சுரேஷ் அவர்கள் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த குற்றவாளியை தேடி வந்த நிலையில் பாவூர்சத்திரம் காவல் துறையினர் தங்கதுரையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :