.சிறுமிக்கு செல்போனில் டார்ச்சர் செய்த பட்டதாரி இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

by Editor / 10-04-2025 04:06:20pm
.சிறுமிக்கு செல்போனில் டார்ச்சர் செய்த பட்டதாரி இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

நெல்லை மாவட்டம் வள்ளியூர், கண்ணன்நல்லூர், கீழத்தெருவைச் சேர்ந்தவர் சின்னத்துரை (23). பிஎஸ்சி பட்டதாரியான இவர், 14 வயது சிறுமி ஒருவரை செல்போன் மூலம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். குறிப்பாக, அந்த சிறுமியின் நிர்வாண புகைப்படங்களை கேட்டு டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி, அவரது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சின்னத்துரையை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

Tags :

Share via

More stories

Logo