ஈரானில் அதிகரிக்கும் கொரோனா

by Editor / 10-11-2021 05:55:56pm
ஈரானில் அதிகரிக்கும் கொரோனா

 

ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 56 லட்சத்தைத் தாண்டியது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.
 
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரான் தற்போது 8-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 8,305 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 60 லட்சத்தைத் தாண்டியது.

மேலும், ஒரே நாளில் 112 பேர் பலியானதால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.27 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
 
கொரோனா பாதிப்பில் இருந்து 56 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 2.47 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo