திருப்பூர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சிக்கனூத்து பகுதியில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான ஒரு தோட்டம் உள்ளது. அங்கு பணியாற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு மகன்கள் நேற்று இரவு குடிபோதையில் ரகளை செய்துள்ளனர் . இது குறித்து தகவலறிந்த குடிமங்கலம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் அங்கு விசாரணைக்காக சென்றுள்ளார். அ ப்போது அவரை மகன்கள் இருவரும் அரிவாளால் வெட்டி உள்ளனர் .இதில் சப் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.போலீஸ் சப் இன்ஸ்பெக்டரே வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Tags : திருப்பூர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை.