குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் பற்றிய தீ - சாமர்த்தியமாக செயல்பட்டு அனைத்த ஊழியர்கள்.
கேரள மாநிலம், குருவாயூரிலிருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் புனலூர்- செங்கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே மலைப்பகுதி என்பதால் இரட்டை எஞ்சின்களை பொருத்துவதற்கான பணியில் நேற்று மாலை ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, ரயில் இன்ஜினில் திடீரென தீப்பற்றி உள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக சற்றும் தாமதிக்காமல் தீ அணைப்பான்களை பயன்படுத்தி தீயை அனைத்து உள்ளனர்.
இருந்தபோதும், ஊழியர்களின் சாமர்த்தியத்தால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து மாற்று எஞ்சின் பொருத்தப்பட்டு குருவாயூர் எக்ஸ்பிரஸ் மதுரை நோக்கி சென்றுள்ளது.
மேலும், இந்த தீ விபத்து தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், புனலூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த தீ விபத்து சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags : குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் பற்றிய தீ - சாமர்த்தியமாக செயல்பட்டு அனைத்த ஊழியர்கள்.














.jpg)
.jpg)



