இஸ்ரேல் அரசை கண்டித்து சிகாகோ நகரில் பொதுமக்கள் போராட்டம்

by Editor / 19-05-2021 04:38:05pm
இஸ்ரேல் அரசை கண்டித்து சிகாகோ நகரில் பொதுமக்கள் போராட்டம்

பொதுமக்கள் போராட்டம்... பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் அரசைக் கண்டித்து சிகாகோ நகரில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் அரசு நடத்தி வரும் தாக்குதல் சம்பவம் கடந்த சில தினங்களில் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி தாக்குதலால் காஸாவின் உள்கட்டமைப்புகள் உருக்குலைந்து வருகின்றன.

கடந்த திங்கள்கிழமை அதிகாலையில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில், ஹமாஸ் இயக்கத்தினா் பயன்படுத்தி வந்த 15 கி.மீ. தொலைவு சுரங்கப் பாதை தகா்க்கப்பட்டதாகவும், ஹமாஸ் தளபதிகள் 9 பேரின் வீடுகள் அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவம் காஸா மீது நடத்திய வான்வழி தாக்குதலில் இதுவரை 58 குழந்தைகள், 35 பெண்கள் உள்பட 198 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் அரசைக் கண்டித்து சிகாகோ நகரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தொடர் தாக்குதலை நிறுத்தக் கோரிய அவர்கள் இஸ்ரேலுக்கு எதிரான பதாகைகளுடன் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் பங்குபெற்றனர்.

 

Tags :

Share via