இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் 220 பேர் பலி 

by Editor / 19-05-2021 04:37:37pm
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் 220 பேர் பலி 



இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது. இருதரப்பும் ஏவுகணை தாக்குதல் நிகழ்த்துவதால் அப்பாவி மக்கள் பலர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இஸ்ரேல் விமான தாக்குதல்களில் இதுவரை, காஸாவில் உள்ள 6 மருத்துவமனைகள், 9 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட 450க்கும் அதிகமான கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
இதுவரை நடந்த தாக்குதலில் 217 பாலஸ்தீனர்களும் 12 இஸ்ரேலியர்களும் உயிரிழந்திருக்கின்றனர். அப்பாவி மக்கள் உயிரிழப்பைத் தடுக்க இருதரப்பு மோதலை முடிவுக்கு கொண்டு வர ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. 
ஜெருசலேம் என்ற நிலப்பரப்புக்காக நீண்ட ஆண்டுகளாக இரு தரப்புக்கும் சண்டை இருந்து வருகிறது. இரு பிரிவினருக்கும் அவ்வப்போது மோதல் வெடிப்பதும் பின்னர் அமைதி காப்பதும் வாடிக்கையாகிப் போனது. ஆனால் இம்முறை வெடித்துள்ள மோதலானது 2014ஆம் ஆண்டு காஸாவில் நிகழ்ந்த போரை நினைவுப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

 

Tags :

Share via