100 - இளைஞர்களுடன் களமாடும் இந்தியா
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன.
இந்த தொடரின் முதல் போட்டி இன்று மொகாலி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக அவர் வழிநடத்தும் முதல் போட்டியாகும்.
அதே நேரத்தில் இந்த போட்டி முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு நூறாவது டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது. நான் டெஸ்ட் அணிக்கு தலைமை தாங்குவேன் என கனவு கூட கண்டதில்லை.
இது மிகப்பெரிய கவுரவம். மறுபக்கம் நூறு டெஸ்ட் போட்டிகளை விளையாடுவது சாதாரண காரியமல்ல. விராட் கோலி இன்று அந்த மைல்கல்லை எட்டுகிறார். நாங்கள் 3 ஸ்பின்னர் மற்றும் 2 சீமர்களுடன் விளையாடுகிறோம்.
அதிக ரன் குவிக்கும் நோக்கத்தில் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளோம்” என டாஸ் வென்ற பிறகு கேப்டன் ரோகித் தெரிவித்துள்ளார்.
திமுத் கருணரத்னே (கேப்டன்), லஹிரு திரிமன்னே, நிஸ்ஸாங்கா, சரித் அசலங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), சுரங்க லக்மால், விஷ்வ பெர்னாண்டோ, லசித் எம்புல்தெனிய, லஹிரு குமாரா.
ரோகித் ஷர்மா (கேப்டன்), மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜெயந்த் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.
Tags :