திருவாரூரில் சிறப்பு உதவி ஆய்வாளர் - இரண்டு காவலர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்பி உத்தரவு*பணியிடை நீக்கம்செய்து எஸ்பி சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூரில் சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட இரண்டு காவலர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்பி உத்தரவு*
திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் வைத்தியநாதன்.இவர் விபத்து வழக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டுள்ளார் என தெரியவந்ததை அடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து எஸ்பி சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோன்று திருவாரூர் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தவர் தீபக்.இவர் ஆயுதப்படை மகளிர் காவல் துறையினர் தங்கி இருக்கும் இடத்திற்கு நள்ளிரவில் சென்று அத்துமீறி செயல்பட்டதாக கூறி பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
Tags :