சாராயம் விற்பனை 33 பேர் கைது

by Admin / 18-05-2023 09:11:15am
சாராயம் விற்பனை 33 பேர் கைது

 *திருவாரூர் மாவட்டத்தில் சாராயம் விற்றதாக கூறி நேற்று ஒரே நாளில் திருவாரூர் மாவட்டத்தில் 33 பேர் கைது.காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை*

 

சாராயம் விற்பனை செய்தல் வெளிமாநில மது பாட்டில்கள் விற்பனை செய்தல் என திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1200 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கடந்த ஐந்து மாதங்களில் 10 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

கடந்த நான்கு நாட்களில் 163 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களிடமிருந்து இதுவரை 4200 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஐந்து மாதங்களில் சாராயம் விற்றவர்களில் 10 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo