80% பேருக்கு டெல்டா வகை கொரோனா உறுதி- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

by Admin / 28-08-2021 01:28:41pm
80% பேருக்கு டெல்டா வகை கொரோனா உறுதி- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட மாதிரி சோதனையில் 80 சதவீத்தில்   2150 பேருக்கு டெல்டா வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 
சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் பேராசிரியர்கள், மாணவர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் தொடக்கவிழாவில் பங்கேற்ற பின் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் 80% பேர் டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு ஏற்றத்தாழ்வுடன் உள்ளதாகவும், அங்கு தனி கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Covid Variant-ஐக் கண்டறியும் Genome Lab சென்னையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் சோதனை அடிப்படையில் செயல்படத்தொடங்கும் என்றும் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பதற்கு தயார் நிலையில் இருப்பதாகவும், மத்திய அரசின் அனுமதியை எதிர்நோக்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

பொதுமக்கள் டெல்டா கொரோனா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை எனவும், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது கடினம் என்றார். கேரளாவில் இருந்து வரும் மாணவர்களுக்கு கண்டிப்பாக RT PCR சோதனை செய்யப்படும் என்ற அவர், நமக்கு கொரோனா இருப்பது குறித்த அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும் என்றார்.வரும் மாதம்  பண்டிகை காலம் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கொரொனா தொற்று ஏற்றம் தாழ்வு உள்ளது என்றார்.

 

Tags :

Share via