கடலுக்குள் உயிருக்கு போராடிய சிறுவன்.. SI நெகிழ்ச்சி செயல்

by Editor / 10-04-2025 03:55:56pm
கடலுக்குள் உயிருக்கு போராடிய சிறுவன்.. SI நெகிழ்ச்சி செயல்

பள்ளி விடுமுறைக்கு கடலுக்கு குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி தத்தளிக்க SI விரைந்து சென்று உயிரை காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது. சென்னை எண்ணூர் காமராஜர் நகரைச் சேர்ந்த 12 வயது பள்ளி மாணவர் கடலுக்கு சென்று குளித்துக்கொண்டு இருந்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்று தத்தளிக்க எண்ணூர் SI திருவேங்கடம் மீனவர்களின் உதவியுடன் சிறுவனை மீட்டு முதலுதவி செய்து காப்பாற்றினார். மாணவர் தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via