முதலமைச்சருக்கு தவ்ஜித் ஜமாத் கட்சியினர் நன்றி தெரிவிப்பு

மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத் திருத்த முன்வடிவினை முழுமையாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றியதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு தவ்ஜித் ஜமாத் கட்சியினர் நன்றி தெரிவித்தனர். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அப்துல் கரீம், பொருளாளர் இப்ராஹீம், துணைத் தலைவர் தாவூத் கைஸர் உள்ளிட்ட பலர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.
Tags :