16வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

by Editor / 01-07-2023 04:09:44pm
16வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கிராமத்தினை சேர்ந்தவர் 16வயது சிறுமி, இந்த சிறுமிக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதையெடுத்து அச்சிறுமியின் பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது, தனக்கு தொடர்ந்து 3 பேர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தாகவும், வீட்டில் கூறினால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதாக கூறியுள்ளார். இதையெடுத்து அச்சிறுமியின் பெற்றோர் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வள்ளிநாயகபுரத்தைச் சேர்;ந்த பால்ராஜ் (35), பாண்டிச்செல்வம்(23) காளிராஜ் (26) 3 பேரும் அச்சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். இது குறித்து யாரிடமும் கூறினால் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியது தெரியவந்தது. இதையெடுத்து போலீசார் 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
 

Tags :

Share via

More stories