நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்- அகிலேஷ்

by Staff / 16-06-2024 05:09:26pm
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்- அகிலேஷ்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தி உள்ளார். மேலும் அவர், "நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கோரிக்கை. நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதை ஒன்றிய கல்வி அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என ராகுல் காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர். மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் நீட் தேவையில்லை" என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via