போதைப்பொருள் ஒழிப்பு - முதலமைச்சர் ஆலோசனை
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (மே 16) ஆலோசனை நடைபெற்றது. தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்று கருத்துக்களை வழங்கினர்.தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் தொடர்பாகவும், மாவட்ட வாரியாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கஞ்சா, கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைத்து வரும் நிலையில், இந்த அவசர ஆலோசனை நடந்தது.
Tags :