டெல்லியில், பிரதமர் மோடி உடன் இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சே சந்திப்பு

by Editor / 16-03-2022 10:42:18pm
டெல்லியில், பிரதமர் மோடி உடன் இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சே சந்திப்பு

 

இலங்கை பொருளாதாரத்திற்கு இந்தியா அளித்த ஆதரவுக்கு பசில் ராஜபக்சே பிரதமர் மோடிக்கு நன்றி.
நெருங்கிய நண்பராக, அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்காக முன் நிற்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய உணவுப்பொருள், மருந்து மற்றும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு இந்தியா கடனுதவியை வழங்கல், அந்நிய செலாவணியை அதிகரிக்க Swap ஒத்துழைப்பு வழங்கல், திருகோணமலை எண்ணெய்க் குத கட்டமைப்பை நவீனமயப்படுத்தல் மற்றும் இலங்கையில் இந்திய முதலீட்டு வசதிகளை ஏற்படுத்தல் உள்ளிட்ட விவரங்களில் இந்திய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார் இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சே.

 

Tags : Sri Lankan Finance Minister Basil Rajapaksa meets Prime Minister Modi in Delhi

Share via