விவசாய பணிக்கு சென்ற பெண் உயிரிழப்பு

by Staff / 19-03-2023 04:09:00pm
விவசாய பணிக்கு சென்ற பெண் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஏ. சொக்கலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த போத்திராஜ் என்பவரின் மனைவி மங்கள ஈஸ்வரி என்பவர் இன்று இராமச்சந்திரபுரம் கிராமத்தில் ஜீவராணி என்பவரின் காட்டிற்கு மிளகாய் பழம் பறிக்க சென்றிருந்த நிலையில் மதியம் அதிகமான வெயிலின் தாக்கத்தினால் தலை சுற்றல் மயக்கம் ஏற்பட்டு மரத்தின் அடியில் அமர்ந்திருந்தவர் திடீரென சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை எடுத்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் உயிரிழந்த மங்கள ஈஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பெண்மணியின் உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories