விஜயகாந்துக்கு விருது: நடிகை விமர்சனம்

by Staff / 26-01-2024 12:12:25pm
விஜயகாந்துக்கு விருது: நடிகை விமர்சனம்

கேப்டன் விஜயகாந்துக்கு மத்திய பாஜக அரசால் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டதற்கு அதிமுகவில் இணைந்த நடிகை காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், அவர் உயிருடன் இருக்கும் போது நீங்கள் இதைச் செய்திருக்க வேண்டும். திரையுலகினரிடம் அவர் எவ்வளவு அன்பையும் மரியாதையையும் சம்பாதித்தார் என்பதைக் கண்டறிந்த பிறகு இப்போது அரசியல் நோக்கத்திற்காக அதைச் செய்கிறீர்கள் என விமர்சித்துள்ளார்.

 

Tags :

Share via