இஸ்லாமிய இளைஞருடன் காதல்.. தங்கையை கொன்ற சகோதரர்

by Staff / 26-01-2024 12:09:39pm
இஸ்லாமிய இளைஞருடன் காதல்.. தங்கையை கொன்ற சகோதரர்

கர்நாடக மாநிலம் ஹுன்சூர் தாலுகாவில் காதலுக்காக இளம் பெண் ஆணவக் கொலை செய்யப்பட்ட கொடூரம் நடந்துள்ளது. இஸ்லாமிய இளைஞரை காதலித்து வந்த 19 வயது இளம்பெண், அவரது சகோதரரால் கொல்லப்பட்டார். மரூர் கிராமத்தைச் சேர்ந்த தனுஸ்ரீ என்பவரை அவரது சகோதரர் நிதின் குளத்தில் தள்ளிவிட்டு கொன்றார். சிறுமியை காப்பாற்ற முயன்ற தாயையும் குளத்தில் தள்ளிவிட்டார். தாயும் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போறிந்த போலீசார், நிதினை கைது செய்தனர்.

 

Tags :

Share via