விஜய் பெரம்பூரில் அளிக்கப்பட்ட வேட்பு மனு தள்ளுபடி ஆகுமா.?.
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பெரம்பூரிலும் திருச்சி கிழக்கிலும் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளார். .நேற்று திருச்சி கிழக்கில் தன் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக [பிரமாணபத்திரம்] வேட்பு மனுவில் தகவல் தெரிவித்துள்ள விஜய் பெரம்பூரில் அளிக்கப்பட்ட மனுவில் இது குறித்துத்தெரிவிக்கப்படாததால் , அந்த மனு நிராகரிக்கப்படலாம் என்கிற தகவல் வெளியான நிலையில், இன்னும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு 6-ந்தேதி வரை கால அவகாசம் உள்ள நிலையில் ,விடுபட்ட தகவலை பூர்த்தி செய்து மீண்டும் மனு தாக்கல் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. அதனால், விஜயின் வேட்பு மனு தள்ளுபடி ஆகுமா..ஆகாதா என்பது வேட்புமனு மீதான பரிசீலனை ஏப்ரல் 7 அன்று நடைபெறும்..அதற்கு பின்னரே அவரது மனு ஏற்கப்பட்டதா இல்லையா என்று தெரியவரும்..
Tags :


















