மதம் சார்ந்த அரசியல் தமிழ்நாட்டில் எதிரொலிக்காது- வைகோ

தமிழக மக்கள் ஒருபோதும் மதம் சார்ந்த அரசியலை விரும்பியது இல்லை, அத்தகைய அரசியல் தமிழ்நாட்டில் ஒருபோதும் எதிரொலிக்காது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த விமர்சன வீடியோ ஒளிபரப்பப்பட்ட நிலையில், அதை வேடிக்கை பார்த்ததாக அதிமுகவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், வேல் யாத்திரை நடத்தியும் பாஜக 2021 தேர்தலில் 4 இடங்களில் மட்டுமே வென்றது, அதே நிலைதான் 2026லும் நடக்கும் என்றார்.
Tags :