ஆளுநரை கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்..?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து வரும் ஏப்ரல் 26ஆம் தேதி மதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று நடைபெற்ற மதிமுக நிர்வாகக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ முன்னிலையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், ஆளுநர் ஆர்.என்.ரவியை, அப்பதவியில் இருந்து நீக்கக்கோருவது உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. மாவட்ட தலைநகரங்களில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags : ஆளுநரை கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்..?