ஏர் இந்தியா விமானத்தில் 11 பேர் மயக்கம்

சமீபத்தில் குஜராத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானபின், அந்நிறுவனத்தின் விமான கோளாறுகள் குறித்த செய்திகள் அதிகம் வெளிவந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில், தற்போது லண்டனில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தவர்களில் 11 பேருக்கு மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டதன் காரணமாக வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விமானம் மும்பையில் தரையிறங்கியதும் அந்த 11 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
Tags :