கி.ராஜநாராயணன் 102 வது பிறந்த நாள்
கரிசல் கி.ராஜநாராயணன் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் நகர மன்ற தலைவர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களின் 102வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அருகே உள்ள கி.ராஜநாராயணன் திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கஸ்தூரி சுப்புராஜ்,கோவில்பட்டி நகர மன்ற தலைவர் தலைவர் கருணாநிதி, ஆகியோர் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் திருஉருவச்சலைக்கு மாலை அணிந்து மரியாதை செலுத்தினர். இதில் அரசு துறை அதிகாரிகள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்
Tags :


















.jpg)
