தமிழக கேரளா எல்லை. வால்பாறை செல்ல இ-பாஸ் அவசியம் – இன்று முதல் நடைமுறை.

by Staff / 01-11-2025 09:00:21pm
தமிழக கேரளா எல்லை. வால்பாறை செல்ல இ-பாஸ் அவசியம் – இன்று முதல் நடைமுறை.

 சோதனைச் சாவடியில் காவல்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் மற்றும் வனத்துறையினர் இணைந்து வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் வெறும் வாகனங்களில் இ பாஸ் எடுத்து உள்ளனர் என்று  சாதனை நடத்தினர்

வால்பாறை மலைப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வரும் நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கை சீர் செ்யும் வண்ணம் இன்று (நவம்பர் 1) முதல் இ-பாஸ் (E-pass) நடைமுறை** அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நடைமுறைப்படி, வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் அனைவரும் முன்பாக ஆன்லைன் வழியாக பதிவு செய்து அனுமதி பத்திரம் பெற்ற பிறகே மலைப்பகுதிக்குள் நுழைய முடியும். இதற்கான இணையதளம் மற்றும் தேவையான வழிமுறைகள் வனத்துறை மற்றும் சுற்றுலா துறை இணைந்து வெளியிட்டுள்ளன.

இ-பாஸ் இல்லாமல் மலைப்பகுதிக்குள் செல்லும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக பொள்ளாச்சி–வால்பாறை வழி, மலக்கப்பாறை வழி, வால்பாறை–அத்திரப்பள்ளி (கேரளா) எல்லைச் சாலைகள் ஆகிய முக்கியச் சாலைகளில் காவல்துறை, நகராட்சி மற்றும் வனத்துறை இணைந்து வாகனங்களைச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி சப் கலெக்டர் ராமகிருஷ்ணன் வால்பாறை–கேரளா எல்லைப் பகுதிகளான சோலையார், மலுக்கப்பாறை பகுதிகளில் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். இ-பாஸ் நடைமுறை சீராக செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்து, சுற்றுலாப் பயணிகளுக்கு சிரமம் இல்லாமல் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாதவாறு பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் எனவும், விலங்குகள் வாழும் பகுதிகளில் வேகமாக வாகனம் ஓட்ட வேண்டாம் எனவும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.இதனால் வால்பாறை செல்லும் பயணிகள் இன்று முதல் இ-பாஸ் பெறுதல் கட்டாயமாகியுள்ளது. வால்பாறை நகராட்சி மூலம் 6 பேர் சோதனையிட தற்காலிகமாக பணி அமர்த்தப்பட உள்ளனர்.

 

Tags : தமிழக கேரளா எல்லை

Share via