சேமித்த பணத்தை அரித்த கரையான்.. கூலித் தொழிலாளிக்கு மகிழ்ச்சி தகவல்

by Editor / 07-05-2025 05:27:14pm
சேமித்த பணத்தை அரித்த கரையான்.. கூலித் தொழிலாளிக்கு மகிழ்ச்சி தகவல்

சிவகங்கையை சேர்ந்த கூலி தொழிலாளி முத்துகருப்பி (30) தான் சம்பாதித்த பணத்தை உண்டியலில் அடைத்து வைத்து பாதுகாப்பிற்காக குழி தோண்டி புதைத்துள்ளார். மகள் காதணி விழாவிற்காக பணத்தை எடுத்த போது அதில் இருந்த ரூ.1 லட்சத்தை கரையான் அரித்துள்ளது. இதனால் செய்வதறியாது முத்துகருப்பி தவித்தார். இந்நிலையில் IOB வங்கி, சேதமான நோட்டுகளை வாங்கி கொண்டு ஓரிரு நாட்களில் பணத்தை திரும்ப வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via