அதிமுக ஆட்சிக்கு வந்தால் மாதம் தோறும் ரூபாய் 2,000 உரிமைத் தொகை வழங்கப்படும்.- முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று கட்சி தலைமையகத்தில் எம்ஜிஆர் நூத்தி ஒம்போது பிறந்த நாளை கொண்டாடியதோடு முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஐந்து முக்கிய வாக்குறுதிகள்,.
1) அதிமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் குலவிளக்கு திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் மாதம் தோறும் ரூபாய் 2000 உரிமைத் தொகை வழங்கப்படும்.
2) பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் நகரப் பேருந்து கட்டணம் இல்லா பயணம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் .கூடுதலாக, ஆண்களுக்கும் நகர பேருந்துகளில் கட்டணம் இல்லா பயணம் அறிமுகப்படுத்தப்படும்.
3) கிராமப்புறங்களில் சொந்த வீட அற்ற ஏழைகளுக்கு அரசே நிலம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டி தரும். நகர் புறங்களில் ஈடற்றவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் விலை இல்லாமல் கட்டி வழங்கப்படும்.
4) மத்திய அரசால் 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ள கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் அதிமுக ஆட்சியில் 150 நாட்களாக விரிவு படுத்தப்படும்.
5) 5 லட்சம் மகளிருக்கு தலா ரூபாய் 25,000 மானியத்துடன் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.
தேர்தலுக்கான முழுமையான தேர்தல் அறிக்கையை தயார் செய்ய நத்தம் விஸ்வநாதன் தலைமையில் 10 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே அமைத்துள்ளார் இந்த குழு ஜனவரி 7 முதல் ஜனவரி 20 வரை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விவசாயிகள் நெசவாளர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களும் கருத்துக்களை கேட்டுமுழுமையான தேர்தல் அறிக்கை குழுவின் பரிந்துரைக்கு பிறகு அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
Tags :


















