உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த ரஷ்யா உத்தரவு
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் தாக்கி வருகின்றன.
கீவ் நகரின் குடியிருப்பு பகுதிகளை ரஷிய படைகள் நேற்று தாக்கின. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கீவ் நகரில் இருந்து வெளியேறினர்.
இன்று காலை உக்ரைனின் மற்றொரு பெரிய நகரமான கார்கிவ்வுக்குள் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைனின் 976 ராணுவ மையங்களை தாக்கி அழித்துள்ளோம் என ரஷியா தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, உக்ரைன் ஆயுதங்களைக் கைவிட்டால் பெலாரசில் பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்யா அழைப்பு விடுத்தது. ஆனால், ரஷ்யாவின் இந்த அழைப்புக்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில், அமைதி பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், அந்நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கப்பல் மற்றும் வான்வழியாக ஏவுகணை தாக்குதல் நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.
Tags :