ஈரோடு கிழக்கு: 27.89% வாக்குகள் பதிவு

by Staff / 27-02-2023 01:16:22pm
ஈரோடு கிழக்கு: 27.89% வாக்குகள் பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 11 மணி நிலவரப்படி 27.89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதுவரை மொத்தம் 63,469 பேர் வாக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் முடிவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. மார்ச் 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

 

Tags :

Share via