மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர்கள் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதி
திருவாரூர் அருகே திருவாதிரைமங்கலம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் சந்துரு, நிஸ்வந்த், யஸ்வந்த் யுகன், சுரேஷ்குமார் உள்ளிட்ட 4 மாணவர்கள் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது இல்லம் தேடி கல்வித் திட்டம் நடத்தும் இடத்திற்குச் சென்ற மின்சார உயர் அறுந்து அருகில் இருந்த மிண்வேளியில் கிடந்துள்ளது. இதனை அறியாமல் விளையாடிக் கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் மின்வேளியை தொட்டதில் மின்சாரம் தாக்கி நான்கு மாணவர்களையும் தூக்கி வீசி உள்ளது.
அதனையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் நான்கு மாணவர்களை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது சம்பந்தமாக வைப்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :














.jpg)




