மதுரையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவர் சிறையில் அடைப்பு

by Editor / 18-08-2022 11:15:47pm
மதுரையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவர் சிறையில் அடைப்பு

கரூர் மாவட்டம், குளித்தலை தாலுகா மேலவதியம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜ் மகன் சரண்ராஜ் மதுரையில் இளம் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பொது ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் மதுரை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதே போன்று மதுரை ஆண்டாள்புரம் மேற்கு தெருவை சேர்ந்த நாச்சியப்பன் மகன் கணேசன் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டு சட்ட ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால்  குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Tags :

Share via

More stories