பிச்சைக்காரன் 2 படத்தில் திடீர் மாற்றம்... விஜய் ஆண்டனி அதிரடி

by Admin / 24-07-2021 09:12:29pm
பிச்சைக்காரன் 2 படத்தில் திடீர் மாற்றம்... விஜய் ஆண்டனி அதிரடி


   
பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து உருவாக இருக்கும் 2வது பாகத்தில் திடீர் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறார் விஜய் ஆண்டனி.சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து 2016-ல் வெளியான படம் பிச்சைக்காரன். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கில் இப்படம் டப் செய்து வெளியாகி அதிக வசூலையும் குவித்தது.

பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதையை எழுதி வருவதாக சில மாதங்களுக்கு முன்பு விஜய் ஆண்டனி தெரிவித்து இருந்தார். முதல் பாகத்தை இயக்கிய சசி, வேறு படவேலைகளில் இருப்பதால் இரண்டாம் பாகத்தை இயக்கவில்லை.இதனால், பாரம் படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற பிரியா கிருஷ்ணசாமி, பிச்சைக்காரன் 2 படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

பின்னர் சில காரணங்களால், பிரியா கிருஷ்ணசாமி இப்படத்தில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது.தற்போது விஜய் ஆண்டனியே இப்படத்தை இயக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். மேலும் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டு விஜய் ஆண்டனிக்கு வாழ்த்து கூறி இருக்கிறார்.

 

Tags :

Share via