அமைச்சரின் உதவியாளர் உள்ளிட்டவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகியது.
கேரள மாநிலம் கொட்டாரக்கரை சட்டமன்ற உறுப்பினரும் அம்மாநில நிதி அமைச்சருமான கே.என்.பாலகோபால் அலுவலகத்தில் பணியாற்றும் திருவனந்தபுரம்,மற்றும் கோட்டயம் பகுதியை சேர்ந்த சுரேஷ்,தீபு,பிஜு, மீனிவியார், பிரசாந்த் என 2 பெண்கள்,3ஆண்கள் என 5பேர் ஒருகாரில் திருவனந்தபுரத்திலிருந்து தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகிலுள்ள கம்பிளி பகுதிக்கு வந்துள்ளனர்.இங்கு ஆய்க்குடி அருகிலுள்ள கம்பிளி பகுதியில் ஏராளமான விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள சூரியகாந்தி மலர் பயிரிடப்பட்டுள்ளதையும்,அது பூத்துக்குலுங்கும் காட்சியை காண்பதற்கும் தினமும் கேரளமாநிலத்தில் இருந்து நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஏராளமானவர்கள் புகைப்படம் எடுத்து சென்றவண்ணம் உள்ளனர்.இதனை கண்டு ரசிக்கவும்,புகைப்படமெடுக்கவும்,இந்த குழுவினரும் வந்துள்ளனர்.காரை தீபு என்பவர் ஓட்டிவந்துள்ளார்.கார் கம்பிளிக்கு வந்த போது கார் நிலைத்தடுமாறி சாலையின் ஓரத்திலிருந்து பனைமரத்தில் மோதியதில் காரிலிருந்தவர்கள் அனைவரும் பலத்த காயமடைந்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த ஆய்க்குடி காவல்துறையினர் காயம்பட்டவர்களை உடனடியாக தென்காசி மருத்துவமனைக்கு கொண்டுசென்று முதலுதவி வழங்கினார்.இதன் தொடர்ச்சியாக காயம்பட்டவர்களை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கேரளமாநிலம் திருவனந்தபுரம் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
Tags :