நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் அக்னிபாத் திட்டத்துக்கு ஆக.21 முதல் ஆள் தேர்வு

நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் அக்னிபாத் திட்டத்த்தின் கீழ் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு வரும்21-ம் தேதி தொடங்குகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் இரவில் இத்தேர்வு நடைபெறுகிறது.
அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் வரும் 21-ம் தேதி முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. இதில் கன்னியா குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மாவட்ட இளைஞர்கள் பங்கேற்கின்றனர்.
அத்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர ஆன்லைனில் விண்ணப்பித்திருந்த இளைஞர்கள் குமரி மாவட்டத்துக்கு வந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பெயர் பதிவு வடசேரி பேருந்து நிலையம் அருகே நடத்த ஏற்பாடு சய்யப்பட்டுள்ளது. உழவர்சந்தை, விளையாட்டரங்கம் அருகே உள்ள நீச்சல்குளம் செல்லும் பாதை, மாநகராட்சி புதிய கட்டிடம் ஆகியவற்றில் இதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.
ஆள்சேர்ப்பு முகாமில் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கவுள்ளனர். 11 நாட்கள் நடைபெறும் இம்முகாமில் தினமும் 3 ஆயிரம் பேருக்கு தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகமானோர் முகாமில் பங்கேற்க இருப்பதால் அண்ணா விளையாட்டரங்கம் முன்புள்ள சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் இரவில் தேர்வு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் வரும் 21-ம் தேதி முதல் அடுத்த மாதம் 1-ம் தேதி வரை தினமும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை வரை ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. இதன் பொருட்டு அண்ணா விளையாட்டரங்க பகுதி முழுவதும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது.
Tags :