பாமக-வில் மருத்துவர் ராமதாஸால் அறிவிக்கபட்ட நிர்வாகிகள் நல்ல நோட்டு -மற்றவர்கள் கள்ள நோட்டு-மாநில பொதுச் செயலாளர்

by Staff / 30-06-2025 11:48:04pm
பாமக-வில் மருத்துவர் ராமதாஸால் அறிவிக்கபட்ட நிர்வாகிகள் நல்ல நோட்டு -மற்றவர்கள் கள்ள நோட்டு-மாநில பொதுச் செயலாளர்

பாமக-வில் மருத்துவர் ராமதாஸால் அறிவிக்கபட்ட நிர்வாகிகள் நல்ல நோட்டு எனவும், மற்றவர்கள் கள்ள நோட்டு எனவும் மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர் பேச்சு - மொத்தத்தில் மாம்பழம் சின்னம் தான் முக்கியம் எனவும் பேட்டியில் தெரிவித்தார்

தென்காசி மாவட்டம் மேலகரம் தனியார் மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒருங்கிணைந்த தென்காசி மாவட்ட புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. புதிய மாவட்ட செயலாளர் சிங்கராயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் குறிப்பாக அவர் பேசுகையில்,ரூபாய் நோட்டுகளில் கவர்னர் கையெழுத்து இருந்தால் மட்டுமே செல்லும் இல்லை என்றால் அது கள்ள நோட்டாக மாறிவிடும். அந்த வகையில் மருத்துவர் ராமதாஸ் அவர்களால் நியமிக்கப்படும் நிர்வாகிகள் மட்டுமே பாமக நிர்வாகிகள் மற்றவர்கள் செல்லாதவர்கள் என கூறினார்.தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், தற்போது பாமக கட்சிக்குள் சிறு சிறு சலசலப்புகள் இருக்கின்றன அதற்காக கட்சி வலு இலக்கவில்லை மேற்கொண்டும் வலுவுடன் காணப்படுகிறது. அந்த வகையில் அங்கும் இங்குமாக கட்சி இருந்தாலும் இரண்டு மாக வலுப்பெற்று மொத்தத்தில் நாங்கள் மாம்பழம் சின்னத்தில் தான் வாக்கு கேட்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

Tags : The executives announced by Dr. Ramadoss in PMK are good notes - others are fake notes - State General Secretary

Share via