சிலிண்டர் விபத்து: 6 பேர் பலி

by Staff / 12-01-2023 12:10:29pm
சிலிண்டர் விபத்து: 6 பேர் பலி

ஹரியானா மாநிலம் பானிபட்ட மாவட்டத்தில் ஏற்பட்ட சிலிண்டர் வெடிப்பு விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 4 குழந்தைகளும் அடங்குவர். இதனால் ஏற்பட்ட தீ விபத்தில், வீடு எரிந்து முழுவதும் நாசமானதுடன், அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியதால் சிலர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். சமையல் செய்யும்போது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது

 

Tags :

Share via

More stories