இன்று ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி.
எந்தத் தொழிலைச் செய்தாலும் அந்த தொழிலில் வெற்றி பெற வேண்டுமானால் ஸ்ரீ விஸ்வகர்மா பூஜை செய்தால் போதும் அந்த தொழில்கள் எல்லாம் சிறப்புற அமையும் என்கிற நம்பிக்கை காலகாலமாக வட இந்திய மக்களிடம் இருந்து வருவதின் காரணமாக இத்தினம் தேசிய புனித தினமாக கொண்டாடப்படுகிறது. தொழில் கருவிகள் கொண்டு வினைகள் புரியும் அனைவரும் இன்று தம் கருவிகளை விஸ்வகர்மாவின் படத்திற்கு, சிலைகளுக்கு முன்னால் படையல் வைத்து வழிபாடு நிகழ்த்துவர். பெரிய தொழிற்சாலையில் இருந்து ராணுவ முகங்களில் இருந்து சின்ன தொழில் கூடம் வரைக்கும் விஸ்வகர்மா பூஜை கோலாகாலமாக கொண்டாடப்படும்.
எல்லா மக்களும் படைப்பு கடவுளை- தொழில் கடவுளை மிக சிறப்பாக வழிபடுவர்.
விஸ்வகர்மாவின் ஐந்து புதல்வர்கள் சாநகரிஷி, சனாதான ரிஷி, அபுவன ரிஷி, புரத்தென ரிஷி, விஷ்வஞக ரிஷி வழிவந்தவர்கள் ஐந்து விதமான தொழில்களை செய்துவருகின்றனா்.
Tags :