நீதிமன்றத்திற்கு வந்தார் மீரா மிதுன்!
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய வழக்கில் நடிகை மீரா மிதுனை எம்.கே.பி நகர் போலீசார் மீண்டும் கைது செய்தனர். 2 வது வழக்கில் கைதான அவரை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை மீரா மிதுன் ஆஜர்படுத்தப்பட்டார்.
சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகர் பகுதியைச் சேர்ந்த ஜோ மைக்கேல் பிரவீன், எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் நடிகை மீரா மிதுன் மீது கடந்த 2020 ஆம் ஆண்டு புகார் ஒன்றை கொடுத்தார்.
அதில், மீரா மிதுன் சமூக வலைத்தளங்களில் தனது பெயரையும், புகைப்படத்தையும் தவறாக பயன்படுத்தி தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார் எனவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
அதன்பேரில் அவதூறு பரப்புதல், சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் நடிகை மீரா மிதுன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். ஆனால் அப்போது அவர் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் பட்டியலினத்தோர் குறித்து இழிவாகப் பேசிய வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை மீரா மிதுனை போலீஸ் காவலில் எடுக்க எம்.கே.பி நகர் போலீசார் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்ககோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதனால் கைது நடவடிக்கை எடுப்பதற்காக எம்.கே.பி நகர் போலீசார் எழும்பூர் 10 வது நீதிமன்றத்தில் கைது வாரண்டை இன்று பெற்றுள்ளனர். இதையடுத்து எம்.கே.பி நகர் போலீசார் நடிகை மீரா மிதுனை 2 வது வழக்கிலும் போலீசார் கைது செய்தது உறுதியானது.
இதையடுத்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை மீரா மிதுன் ஆஜர்படுத்தப்பட்டார். ஜோ மைக்கில் ப்ரவீன் என்பவர் கொடுத்த புகாரில் எம்.கே.பி நகர் போலிசார் நேற்று கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.
2 நாள் காவலில் எடுத்து விசாரிக்கவும் எம் கே பி நகர் போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். பட்டியிலின மக்களை அவதூறாக பேசியதாக விவகாரத்தில் ஏற்கனவே மீராமிதுன் கைது செய்யப்பட்டிருந்தார்.
Tags :