ஏர்டெல் - எரிக்சன் நடத்திய முதல் 5ஜி சோதனை

by Editor / 05-10-2021 07:55:53pm
ஏர்டெல் - எரிக்சன் நடத்திய முதல் 5ஜி சோதனை

இந்தியாவில் தலைநகராகிய டெல்லிக்கு வெளியே கிராமப் பகுதி ஒன்றில் ஏர்டெல் நிறுவனமும் ஸ்விட்சர்லாந்து நாட்டை தலைமையகமாக கொண்ட எரிக்சன் தகவல் தொடர்பு கருவி உற்பத்தி நிறுவனமும் இணைந்து 5ஜி சோதனைகளை அக்டோபர் 5 செவ்வாய்க் கிழமையன்று நடத்தினர்.


இந்தியாவின் கிராமப் பகுதி ஒன்றில் 5ஜி சோதனைகள் நடத்தப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
இந்திய தொலைத் தகவல் தொடர்புத் துறை 5ஜி சோதனைகளை நடத்துவதற்கு 3500 அலைக்கற்றை பரிசு ஒதுக்கியுள்ளது. அந்த அலைவரிசையில் பாய்பூர் பிராமண் கிராமத்தில் 5ஜி செயல்முறைகள் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னர் ஏர்டெல் நிறுவனமும் எரிக்சன் நிறுவனமும் சேர்ந்து குருகிராமம், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் 5ஜி சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளன.


இந்தியாவில் 5 ஜி பிராட்பேண்ட் அலைவரிசையை பயன்படுத்துவது 10 சதவீதம் அதிகரிக்கும் பட்சத்தில் இந்தியாவில் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.8 சதவீதம் உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எரிக்சன் நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசிய பிரிவு தலைவர் நன்ஜியோ மிர்டிலோ கூறினார்.

 

Tags :

Share via