கொரோனா விலக சிதம்பரம் நடராஜருக்கு 10 ஆயிரம் நாமாவளியில் அபூர்வ அர்ச்சனை
கொரோனா வைரஸ் போன்ற நோய்கள் விலக வேண்டும், மேலும் நோய்கள் தொடராமல் இருக்க வேண்டும், உலக நலனுக்காக வேண்டிக்கொண்டு சிதம்பரம் ஸ்ரீ நடராஜருக்கு சகஸ்ரநாம லட்சார்ச்சனை நடைபெற்றது. இது 10 ஆயிரம் நாமங்களைக் (பெயர்களை) கொண்ட ஒரு தொகுப்பு ஆகும்.
இறைவனுக்கு பல கோடி பெயர்கள் உண்டு அவற்றை வேதத்திலே எண்ணிக்கைகளாக கோடி கோடி என்று வர்ணித்து இருக்கிறது. அதன்படி 10,000 நாமாவளிகளைக் கொண்டு லட்சார்ச்சனை நடைபெற்றது. பொதுவாக அனைத்து தெய்வங்களுக்கும் ஆயிரம் நாமங்களைக் கொண்ட சஹஸ்ரநாமம் நமக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் ஸ்ரீ நடராஜருக்கு மட்டுமே இந்த பத்தாயிரம் நாமாவளிகள் அயுத சகஸ்ரநாமம் நம் முன்னோர்கள் எழுதி வைத்திருக்கின்றனர் என்பது சிறப்பாகும்.100 தீட்சிதர்கள் இந்த வைபவத்தில் கலந்து கொண்டார்கள்.
Tags :