அமித்ஷா- இபிஎஸ் எடுக்கும் முடிவே இறுதியானது - அண்ணாமலை

அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி எடுக்கும் முடிவே இறுதியானது என முன்னாள் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் இன்று (ஜூலை.19) செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "அதிமுக - பாஜக கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை. திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டுமென்ற ஒற்றைப்புள்ளியில் செயல்படுகிறோம். 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும்" என்று தெரிவித்துள்ளார்.
Tags :