ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள்
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணியில் ஓட்டுநர் இல்லா ரயில்களை இயக்க முடிவு செய்து அதற்கான வேளைகளில் தற்போது மெட்ரோ நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக முதலில் 138 ஓட்டுநர் இல்லா ரயில்கள் வாங்குவதற்கு திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், தற்போது 70 ரயில்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு மொத்தமாக ரூ.61,843 கோடி செலவாகும் என திட்டமிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வரும் 2026ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கபட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags :