மணிப்பூர் கலவரம்: ராகுல் காந்தி கடும் விமர்சனம்
மணிப்பூரில் நடந்த வன்முறை தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். மணிப்பூர் நிலவரங்கள் குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு அதற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டதாகவும், ஆனால் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்றும் ராகுல் கூறினார். ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் இந்தியாவின் உள் விவகாரங்கள் குறித்து விவாதித்தது. இது குறித்து பிரதமர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இந்தியாவில் சிறுபான்மை சமூகங்கள் மீதான சகிப்புத்தன்மையின்மையே தற்போதைய சூழ்நிலைக்கு காரணம் என்று குற்றம் சாட்டினார்.
Tags :