ஏடிஎம் மிஷினில் பணம் போட்டால் பால் 

by Editor / 12-06-2021 05:08:51pm
ஏடிஎம் மிஷினில் பணம் போட்டால் பால் 

 

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் - ராதாபுரம் இடைப்பட்ட கிராமத்தில் சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கை வளமிக்க பால் பண்ணை அமைத்து தரமான பசும்பால் அனைத்து தரப்பு மக்களுக்கும் குறைந்த விலையில் கிடைக்கின்ற வகையில்  'பண்ணை டு பட்டினம்' என்ற திட்டத்தை கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு நபர் சிறப்பாக செயல்படுத்தி கொண்டிருக்கிறார். இந்த பண்ணையில் இருக்கும் பசுமாடுகள்   கிர் (GIR) என்ற குஜராத் மாநிலத்தை சேர்ந்த உயர்ரக நாட்டு மாடுகள் ஆகும்.
 தற்போது இந்த நிறுவனத்தில் 2 தானியங்கி பால் எந்திரங்கள் உள்ளன. ஒரு தானியங்கி எந்திரம் நாகர்கோவில் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலையில் உள்ள வணிக நிறுவன கட்டிடத்தின் கீழ் தளத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அளவில் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரத்தில் பசும்பால் எளிதாக கிடைக்கும் வகையில் பணம் செலுத்திய உடன் அடையாள அட்டை மூலமாகவோ (Pre.Paid) அல்லது 10 ரூ. முதல் 500ரூ வரை வாடிக்கையாளர்களே மிஷினில்  பணத்தை செலுத்தி தாங்கள் கொண்டு வரும் பாத்திரத்திலோ கண்ணாடி பாட்டில்களிலோ பால் எடுத்துக் கொள்ளலாம்.
 மேலும், இந்த இடத்தில் இருக்கும் ஏடிஎம் மெஷினில் பாலை வாங்க முடியாத மக்களுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று பால் வழங்கும் வகையில் ஒரு சிறிய வாகனத்தில் தானியங்கி எந்திரம் (ATM) பொருத்தப்பட்டு   அதிகாலை நேரங்களில் நாகர்கோவில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் விநியோகம் செய்து வருகின்றனர். 

 

Tags :

Share via