பெங்களுரூ வந்த இருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு
பெங்களுரூ வந்த இருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு
கொரோனா அச்சத்திலிருந்து மீளாத நிலையில்,மீண்டும் ஒரு புதிய வகை வைரஸ் ஒமிக்ரான்.இப்பொழுது உலகத்தை ஆட்டிப்படைக்க துவங்கியுள்ளது.உலகசுகாதார நிறுவனம் அண்மையில் இவ்வைரஸ் குறித்து அறிவித்தது.தென்
ஆப்பிரிக்காவில் பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ்,கொரோனாவை விட பலமடங்கு ஆற்றல் கொண்டது என்றும்அது
குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.இந்தியாவில் இவ்வைரஸ் பரவிடாவண்ணம்
இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டது.நான்கு விமானங்களிலும்பரிசோதனையை தீவிரப்படுத்தியது. நேற்று
இந்திய மருத்துவ ஆராய்சி கவுன்சில் தொற்று நோய்தலைவர் சாமிரன் பாண்டே,இந்தியாவிலும் ஒமிக்ரான் பரவி
இருக்கலாம்என்று தெரிவித்த நிலையில்,இன்று கர்நாடக மாநிலம் பெங்களுரூ விமானத்தில் வந்த இரண்டு தென்ஆப்பிரிக்க பயணிகளுக்கு ஒமிரான் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார். ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட இருவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - கர்நாடக சுகாதாரத்துறை தகவல்
ஒமிக்ரான் வைரஸ் தற்பொழுது தென்ஆப்பிக்கா,கனடா,பிரான்ஸ்,நெதர்லாந்து,பெல்ஜியம்,பிரிட்டன்,டென்மார்க்,ெஜர்மனி,இஸ்ரேல்,
ஜப்பான்,ஆஸ்திரேலியா,செக் குடியரசு,ஆஸ்திரியா போன்ற நாடுகளுக்ம் பரவ்யுள்ளது.
Tags :